×

பாஜ மூத்த தலைவர் சுஷில் மோடிக்கு புற்றுநோய்: பிரசாரத்துக்கு செல்லமாட்டேன் என அறிவிப்பு

பாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வரும் பாஜ மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி பீகார் மாநிலத்துக்கான கட்சியின் நட்சத்திர பிரசாரகராக உள்ளார். அதே போன்று தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிலும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில்,நேற்று டிவிட்டரில் பதிவிட்டுள்ள சுஷில்குமார், கடந்த 6 மாதங்களுக்கு முன் எனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன். இது பற்றி பிரதமர் மோடியிடமும் தெரிவித்து உள்ளேன். இதனால் மக்களவை தேர்தல் பிரசாரத்துக்கு செல்ல முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜ மூத்த தலைவர் சுஷில் மோடிக்கு புற்றுநோய்: பிரசாரத்துக்கு செல்லமாட்டேன் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,Sushil Modi ,Patna ,Bihar ,Deputy Chief Minister ,Sushil Kumar Modi ,Sushil Kumar ,Twitter ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...