×

பையா 2 படத்தில் கார்த்தி நடிப்பாரா? லிங்குசாமி பதில்

சென்னை: கடந்த 2010 ஏப்ரல் 2ம் தேதி திரைக்கு வந்த படம், ‘பையா’. லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்தனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். அப்போது வெற்றிபெற்ற இப்படம், தற்போது வரும் 11ம் தேதி டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இதுகுறித்து லிங்குசாமி கூறியதாவது: பையா படத்தை ரீ-ரிலீஸ் செய்வதன் மூலம் இன்றைய ரசிகர்களுக்கும் உற்சாகம் ஏற்படும்.

இதையடுத்து ‘பையா 2’ படத்தை உருவாக்குவது குறித்து நானும், கார்த்தியும் உறுதியாக முடிவு செய்யவில்லை. ஆனால், இதே தலைப்பை பயன்படுத்தி வேறொரு ஜானரில் ஒரு கதையை உருவாக்கி பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். அடுத்து இயக்கும் படம் பான் இந்தியா முறையில் உருவாகிறது. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து அபிமன்யு, அர்ஜூனன் ஆகியோரின் கதைகளை அடுத்தடுத்து 2 பாகங்களாக இயக்குகிறேன். அதுபற்றிய அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள்.

The post பையா 2 படத்தில் கார்த்தி நடிப்பாரா? லிங்குசாமி பதில் appeared first on Dinakaran.

Tags : Karthi ,Lingusamy ,Chennai ,Tamannaah ,Yuvan Shankar Raja ,Will Karthi ,
× RELATED கார்த்தி நடிக்கும் சர்தார்-2...