×

வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய்

சென்னை: ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பை முடிக்க உள்ள விஜய், அடுத்ததாக வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கு பிறகு தனது 69வது படத்தில் நடிக்கப்போவதாகவும் அதுவே தனது கடைசி படமாக இருக்கும் என்றும் விஜய் கூறியிருந்தார். அதன்படி அவரது கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக கூறப்பட்டது. அதே சமயம், கார்த்திக் சுப்புராஜின் பெயரும் அடிபட்டது. ஆனால் வெற்றிமாறன், ‘விடுதலை 2’ படத்திலும் அதன் பிறகு வெப்சீரிஸ் உருவாக்கும் பணியிலும் ஈடுபட உள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ், சூர்யா படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில், ‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ படங்களை இயக்கிய வினோத், விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார். இது அரசியல் பின்னணி கதையாம். இதில் நடிக்க விஜய் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன், கமல்ஹாசனை வைத்து வினோத் படம் இயக்க இருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் தள்ளிப்போயிருக்கிறது.

The post வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Vinod ,CHENNAI ,Venkat Prabhu ,
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...