- ஈரோடு
- சின்னமாரியம்மன் கோயில் தெரோட்டம்
- ஈரோடு சின்னமாரியம்மன் கோயில் திருவிழா
- பொங்கல்
- ஈரோடு பெரியமாரியம்மன் கோயில்
- சின்னமாரியம்மன்
- காரைவாஜக்கல் மாரியம்மன் கோயில் திருவிழா
- கோவில்
ஈரோடு: ஈரோடு சின்னமாரியம்மன் கோயில் திருவிழாவிவையொட்டி இன்று காலை தேரோட்டம் மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு பெரியமாரியம்மன் கோயில், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் கோயில் முன்பாக உள்ள கம்பத்திற்கு புனித நீர் மற்றும் பால் ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
நேற்று காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழா, தொடர்ந்து இரவு மாவிளக்கு, கரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை பொங்கல் விழாவும், சின்னமாரியம்மன் கோயில் தேரோட்டமும் நடைபெற்றது. உற்சவ சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர். வருகிற 6ம் தேதி கம்பம் எடுக்கும் விழாவும், மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. 7ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகின்றது.
The post ஈரோடு சின்னமாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.