×
Saravana Stores

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ரேசன் கடைகள் இருக்காது: திருமாவளவன் பேச்சு

சென்னை: மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ரேசன் கடைகள் இருக்காது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆலத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது சிதம்பரம் விசிக வேட்பாளர் திருமாவளவன் பேசினார். 100 நாள் வேலை திட்டம் இருக்காது, சமூக நீதி இருக்காது, அதிபர் ஆட்சியே வந்துவிடும் என்றும் கருத்து தெரிவித்தார். ஏழை மக்கள் ரூ.50,000 கடன் வாங்கினால் வீட்டுக்கே வந்து வங்கி நிர்வாகம் வசூலிக்கும். மோடியின் நண்பர்களான அதானி, மல்லையா வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கினால் தள்ளுபடி செய்வார்கள் என்று திருமாவளவன் காட்டமாக தெரிவித்தார்.

The post மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ரேசன் கடைகள் இருக்காது: திருமாவளவன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : MODI ,MRU ,MALAWAN ,Chennai ,Liberation Leopards Party ,Thirumavalavan ,Chidambaram ,Visika ,Alathur ,
× RELATED புதுகையில் போலி ஆவணம் மூலம் 140 ஏக்கர்...