- தில்லி
- முதல் அமைச்சர்
- அரவிந்த் கெஜ்ரிவால்
- திகர் சிறைச்சாலை நிர்வாகம்
- நிலை
- தலைமை ஒருங்கிணைப்பாளர்
- ஆம் ஆத்மி கட்சி
- அமலாக்கத் துறை
- திகார் சிறை நிர்வாகம்
டெல்லி: டெல்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறையினர் மதுபான கொள்கை வழக்கில் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் உள்ளார். மேலும் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல் தற்போது மோசமடைந்துள்ளதாகவும், அவர் 4.5 கிலோ எடை குறைந்திருப்பதாகவும் டெல்லி அமைச்சர் அதிஷி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நிலை குறித்து திகார் சிறை நிறுவனம் விளக்கமளித்துள்ளது. “அரவிந்த் கெஜ்ரிவால் உடல் நிலை நன்றாக உள்ளார், சிறையில் அடைக்கப்பட்டத்திலிருந்து அவரின் உடல் எடையில் எவ்வித மாற்றமும் இல்லை, அவரின் ரத்த சர்க்கரையின் அளவும் இயல்பாக உள்ளது,
அவர் காலையில் யோகா மற்றும் தியானம் செய்கிறார், ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்பாடு இருக்க அவருக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது, அவரின் சர்க்கரை அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திகார் சிறையின் எண் 2-ல் உள்ள அறையில் கெஜ்ரிவால் வைக்கப்பட்டுள்ளார்.
முதல்வருக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவிற்கு வீட்டில் சமைத்த உணவு வழங்கப்படுகிறது.
உடல்நிலை சார்ந்த அவசர சூழ்நிலை ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ குழு தயாராக உள்ளது. கெஜ்ரிவாலின் மனைவி நேற்று அவருடன் உரையாடினார். ஏப்ரல் 1ம் தேதி கெஜ்ரிவாலை 2 மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது உடல் எடை 65 கிலோ இருந்தது” என திகார் சிறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நலமாக உள்ளார்: திகார் சிறை நிர்வாகம் விளக்கம் appeared first on Dinakaran.