×

அவல் இட்லி

தேவையான பொருட்கள்

ஒரு கப் அவல்
அரை கப் அரிசி மாவு
ஒரு கப் தயிர்
ஒரு பாக்கெட் ஈனோ சால்ட்
அரை டீஸ்பூன் உப்பு
தேவையான அளவு தண்ணீர்.

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் அவலை கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அவலைப் போட்டு அரிசி மாவு, தயிர், உப்பு எல்லாம் சேர்த்து தண்ணீர் விட்டு பதமாக இட்லி மாவுப் பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். இப்படி ஒரு மணிநேரம் ஊற விடவும். வேண்டுமென்றால் திரும்பவும் சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி வைக்கவும். கடைசியாக ஈனோ சால்ட் சேர்த்து லேசாகக் கலக்கிவிடவும். இட்லித் தட்டில் ஊற்றி இட்லிப் பானையில் 12 நிமிடம் வேகவைக்கவும். சில சமயம் தட்டையாக வரும். வேண்டுமென்றால் புளித்த இட்லி மாவு இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளவுதான் அவல் இட்லி தயார். இந்த இட்லிக்கு காரமான அனைத்து வகையான சட்னியுமே நன்றாக இருக்கும்.

The post அவல் இட்லி appeared first on Dinakaran.

Tags : Aval Idli ,
× RELATED செட்டிநாடு ஸ்பெஷல் கார அடை