×

தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையால் 2% தவறு வருவதற்கு வாய்ப்பு: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையால் 2% தவறு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 22 லட்சம் வாக்குகளில் 46,000 வாக்குகளில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். வாக்கு இயந்திரங்களில் 2ஜி தொழில்நுட்பத்துடன் கடந்த முறை செயல்படுத்திய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

The post தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய நடைமுறையால் 2% தவறு வருவதற்கு வாய்ப்பு: ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Electoral Commission ,Chennai ,Election Commission ,R. S. Bharati ,Chennai Intellectual ,Rs. S. Bharati ,Dinakaran ,
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...