- டாக்டர்
- இரா. கே. சிவனப்பன்
- சென்னை
- சென்னை பல்கலைக்கழகம்
- சிவனப்பன்
- கரக்பூர்
- அமெரிக்க பல்கலைக்கழகம்
- தின மலர்
சென்னை:” புகழ்பெற்ற நீரியல் நிபுணர் பேராசிரியர் முனைவர் இரா.க.சிவனப்பன் காலமானார். சென்னை பல்கலை.யில் இளங்கலை கட்டடப் பொறியியல், காரக்பூர் ஐஐடியில் பொறியியல் மேற்படிப்பும் பயின்றவர் சிவனப்பன். அமெரிக்க பல்கலை.களில் நீர் மேலாண்மை, நவீன பாசன, வடிகால் முறைகள் ஆகியவை பற்றிய சிறப்பு அறிவியலை பயின்றவர். சொட்டு நீர்ப்பாசனம் பற்றிய கருத்துகளை உருவாக்கி அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியவர் இரா.க.சிவனப்பன். 1956 முதல் 1986 வரை தமிழ்நாடு வேளாண் பல்கலை.யில் பேராசிரியராகவும் முதன்மையராகவும் பணியாற்றியவர்.
பல நாடுகளில் நீர் மேலாண்மை, பாசன நுட்பங்கள், சொட்டு நீர்ப் பாசனத்துக்கு ஆலோசகராக இருந்தவர் இரா.க.சிவனப்பன். ஐநா சபை வளர்ச்சி திட்டம், உலக வங்கி, உலக நீர் ஆய்வு நிறுவனம் உட்பட உலகளாவிய அமைப்புக்கும் ஆலோசகராக இருந்தார். தமிழ்நாடு அரசின் திட்டக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் பேராசிரியர் முனைவர் இரா.க.சிவனப்பன். 1,000-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் இரா.சு.சிவனப்பன். 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் நீர் மேலாண்மை தொடர்பான உயர்மட்டக் கருத்தரங்குகளில் ஆய்வு உரைகளை நிகழ்த்தியுள்ளார்
நீர் மேலாண்மை பற்றிய சிறந்த ஆய்வுகளுக்காக 1989-ல் ஸ்வீடன் நாட்டின் லிங்கோபிங்க் பல்கலை. முனைவர் பட்டம் வழங்கியது. பாசன மேலாண்மை தொடர்பான சிறந்த ஆய்வுகளுக்காக 2005-ல் தமிழ்நாடு வேளாண் பல்கலை. முனைவர் பட்டம் வழங்கியது.
The post புகழ்பெற்ற நீரியல் நிபுணர் பேராசிரியர் முனைவர் இரா.க.சிவனப்பன் காலமானார் appeared first on Dinakaran.