×

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 1991 அக்டோபரில் முதல்முறையாக எம்.பி. ஆனார் மன்மோகன்சிங். நரசிம்மராவ் அரசாங்கத்தில் 1991-96 வரை நிதி அமைச்சராகவும், 2004 முதல் 2014 வரை பிரதமராகவும் இருந்தார். இந்நிலையில் மன்மோகன்சிங்கின் 33 ஆண்டுகால நாடாளுமன்ற பதவி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; 33 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக நாட்டிற்கு நீங்கள் செய்த அளப்பரிய சேவைக்கு திமுக சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பதவிக் காலம் முழுவதும் பணிவு, புத்திசாலித்தனம் மற்றும் அரசியல் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளீர்கள். சவாலான காலங்களில் உங்கள் தலைமைத்துவம் எனக்கு உட்பட பலருக்கு உத்வேகம் அளித்தது. திமுக சார்பிலும், தமிழ்நாட்டு மக்கள் சார்பிலும், உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Former ,Manmohan Singh ,Chief Minister ,K. ,Stalin ,Chennai ,K. Stalin ,M. B. Anar Manmogansing ,Narasimmarao ,Minister of Finance ,Manmogansing ,Manmohan Singh K. Stalin ,
× RELATED மோடி தள்ளுபடி செய்தது விவசாயிகளின்...