×

தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும்.. அதிமுக, பாஜகவிற்கு ஒரு சீட் கூட கிடையாது : கருத்து கணிப்பில் தகவல்!!

சென்னை : தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்தியா டூடே – சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் வருகின்ற 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் வருகின்றன. 19ம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளன. இந்த நிலையில் இந்தியா டுடே, சி வோட்டர் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் தேர்தல் கணிப்புகளை நடத்தியது. இதில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி 1 தொகுதிகளில் வெற்றி பெறாது என அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவிலும் மொத்தம் இருக்கும் 20 தொகுதிகளையும் இண்டியா கூட்டணி கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போல் தெலங்கானாவில் காங்கிரஸ் 10, பாஜக 3 தொகுதிகள், பிஆர்எஸ் கட்சி 3 தொகுதிகள் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை போன்று ஆந்திராவிலும் பாஜக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 80 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் 72 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணிக்கு தற்போது உள்ள எம்.பி.சீட்களில் 18 இடங்கள் குறையும் எனவும் இண்டியா கூட்டணிக்கு கூடுதலாக 75 இடங்கள் கிடைக்கும் என கருத்து கணிப்பில் கணிக்கப்பட்டுள்ளது. இதே போல் பாஜகவுக்கு 40% வாக்குகள், காங்கிரஸ் கட்சிக்கு 19% வாக்குகளும் கிடைக்கவும் என இந்தியா டுடே – சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும்.. அதிமுக, பாஜகவிற்கு ஒரு சீட் கூட கிடையாது : கருத்து கணிப்பில் தகவல்!! appeared first on Dinakaran.

Tags : DMK alliance ,Tamil Nadu ,AIADMK ,BJP ,Chennai ,India Today ,Lok Sabha elections ,India ,Dinakaran ,
× RELATED அதிமுக-தேமுதிக கூட்டணி வேட்பாளர்கள்...