×

தேர்தல் பணிகளில் அதிகாரிகள் பிஸி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு

 

தேவாரம், ஏப்.3: நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில், நாடாளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகிறது. உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம், சின்னமனூர், கம்பம், கூடலூர், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்கள் மாவட்டத்தில் முழுவதுமாக தடை செய்யப்பட்ட நிலையில் கடைகள், ஹோட்டல்கள், மளிகை கடைகள், வணிக வளாகங்களில் அதிகாரிகளின் தொடர் ரெய்டுகளால் பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. தேனி, கம்பம், சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் அதிகாரிகள் தொடர்ச்சியாக ரெய்டில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் பிளாஸ்டிக் பயன்பாடு ஓரளவு கட்டுக்குள் வந்தது. தற்போது தேர்தல் பணிகளில் அதிகாரிகள் பிஸியாக உள்ளதால் பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணித்து தடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

The post தேர்தல் பணிகளில் அதிகாரிகள் பிஸி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Busy District ,Devaram ,Ap.3 ,Theni district ,Uttamapaliam ,Gombai ,Pannapipuram ,Chinnamanur ,Gampam ,
× RELATED போடி விரிவாக்க சாலையில் சாலை நடுவே...