×

காங்கயத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு

 

காங்கயம், ஏப்.3: மக்களவை தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற இருப்பதால் தேர்தலையொட்டி காங்கயத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. பொதுமக்களுக்கு முழுமையான போலீஸ் பாதுகாப்பு தயார் நிலையில் இருப்பதை உணர்த்தும் வகையில் போலீஸ் அணிவகுப்பு நடைபெற்றது. அணிவகுப்பை காங்கயம் களிமேடு பகுதியில் காங்கயம் டிஎஸ்பி பார்த்திபன் தொடங்கி வைத்தார். அணிவகுப்பு ஊர்வலமானது கடை வீதி, காங்கயம் பஸ் நிலையம் வழியாக சென்று கரூர் ரோடு பகுதியில் நிறைவடைந்தது. இந்த அணிவகுப்பில் காங்கயம் தமிழக போலீசார் 75 பேர், குஜராத் மாநில போலீசார் 75 பேர் கலந்து கொண்டனர்.

The post காங்கயத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.

Tags : Police flag parade ,Gangaiah ,Kangayam ,Lok Sabha elections ,flag parade ,Gangayama… ,Police flag parade in Gangayama ,
× RELATED ஆபாச வீடியோ வெளியிட்ட யூடியூப் சேனல் மீது பெண்கள் புகார்