×

வாக்களிக்க பணம் வாங்கினால் சிறை

 

சிவகங்கை, ஏப். 3: மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்.19 அன்று மக்களவை தேர்தல நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் நடைமுறையின் போது வாக்களிப்பதற்கு எந்தவொரு நபரும் ரொக்கமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் கொடுப்பதும் மற்றும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தண்டனைக்குரிய செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது ஒரு வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். வாக்காளர்களைஅச்சுறுத்துதல் மற்றும் மிரட்டும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். வாக்களிப்பதற்கு லஞ்சம் பெறும் மற்றும் வாங்கும் நபர்கள், வாக்காளர்களை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது பறக்கும் படை குழுவினரால் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும், புகார்கள் குறித்தும் 1800 425 7036 என்ற கட்டணமில்லா இலவச எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது சிஸ்வீரீவீறீ செயலி மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். மேலும், மாவட்ட தேர்தல் அலுவலர் கட்டுப்பாட்டு அறையில் 04575-240455, 240465, 240475 மற்றும் 240485ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post வாக்களிக்க பணம் வாங்கினால் சிறை appeared first on Dinakaran.

Tags : Jail ,Sivagangai ,District Election Officer ,Collector ,Asha Ajith ,Lok Sabha ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர் திடீர் மரணம்!!