×

சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள்

 

தொண்டி, ஏப்.3: கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி செக்போஸ்ட் பகுதியில் அதிகளவு ரோட்டின் இருபுறமும் மணல் நிறைந்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளதால், நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது. பட்டுக்கோட்டை-ராமேஸ்வரம் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டி செக்போஸ்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நம்புதாளை செல்லும் வழி முழுவதும் ரோட்டின் இருபுறமும் மணல் நிறைந்துள்ளது. இதனால் ரோட்டின் அளவும் குறைந்துள்ளது.

எதிரே வரும் வாகனத்திற்கு வழி விட ஒதுங்கும் போது டூவீலரில் வருவோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். அதனால் அதிகாரிகள் மணலை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து காதர் கூறியது. தொண்டி செக்போஸ்டில் இருந்து நம்புதாளை செல்லும் ரோடு மிகவும் மோசமாக இருபுறமும் மணல் அதிகம் உள்ளது. இது டூவீலரில் செல்வோருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

வாகனங்கள் வேகமாக செல்லும் போது சில நேரங்களில் மணலில் வாகனத்தின் டயர் சிக்கி விபத்து ஏற்படுகிறது. இதனால் மாதத்திற்கு ஒருமுறையாகவது சாலையின் இருபக்கமும் உள்ள மணலை அகற்ற வேண்டும். அப்போது தான் வாகன ஓட்டிகள் அச்சமின்றி பயணம் செய்ய முடியும். அதிகாரிகள் தொடர்ந்து சாலையை கண்காணித்து மணல் சேகரம் ஆகாமல் தடுக்க வேண்டும். அப்போது தான் வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தடுக்க முடியும். உடனே மணலை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post சாலையின் இருபுறமும் மணலால் விபத்தில் சிக்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Thondi ,East Coast Road ,Pattukottai-Rameswaram East Coast Road ,Dinakaran ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...