×

100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி

 

கோவை, ஏப். 3: கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்தார். தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார். இதில், வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன், வட்டாட்சியர் மணிவேல் மற்றும் கல்லூரி, மாணவ, மாணவிகள் என பலர் கலந்துகொண்டனர்.

மேலும், பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் தப்பாட்டம் அடித்தும், மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுவர்களில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சூலூர் மலைப்பாளையத்தில் கடை வீதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மயிலம்பட்டி துணி தொழிலகத்தில் மகளிர் தொழிலாளர்களிடம் நூறு சதவீதம் வாக்களிப்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

ஜமீன்முத்தூர், ராமபட்டிணம் பகுதிகளில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் வெளியிடப்பட்டது. வடசித்தூர், காட்டம்பட்டி ஆகிய கிராமங்களில் தப்பாட்டம் அடித்தும், வதம்பசேரியில் பேருந்து நிறுத்தம், கடைகளில் துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

The post 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு மனித சங்கிலி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kongunadu College of ,Arts and Sciences ,District Election Officer ,District Collector ,Krantikumar Badi ,Dinakaran ,
× RELATED அரசு கலை மற்றும் அறிவியல்...