×

பாஜ கூட்டணி கட்சியினர் அடிதடி

புதுவையில் போட்டியிடும் தேஜ கூட்டணி கட்சி வேட்பாளர் நமச்சிவாயத்துக்கு இந்திய ஜனநாயக கட்சியினர் ஆதரவு தொிவித்துள்ளனர். அக்கட்சியின் மாநில தலைவரான அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் நேற்று காலை பாஜக அலுவலகத்துக்கு வந்தனர்.அப்போது பாஜ அலுவலக வாசலில் பிரசார வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் இந்திய ஜனநாய கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைப்பாளரான சத்தியவேல் படம் ஒட்டப்பட்டிருந்தது.

அருகில் சத்தியவேல் நின்று கொண்டிருந்த நிலையில், இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள், ‘நாங்கள்தான் ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகிகள். நீ எப்படி கட்சியின் பெயரை பயன்படுத்தலாம்’ எனக்கூறி பிரசார வாகனத்தில் இருந்த பேனரை கிழித்தனர். இதை தடுக்க வந்த சத்தியவேலை தாக்கினர். இதையடுத்து சத்தியவேல் அந்த வாகனத்தை அங்கிருந்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு சென்றனர்.

The post பாஜ கூட்டணி கட்சியினர் அடிதடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Democratic Party of India ,Namachivayam ,Teja Alliance Party ,Puduvai ,president ,Annadurai ,
× RELATED கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம்...