×

பாஜவுடன் கூட்டு சேர்த்திருந்தால் ரூ.1,000 கோடி, 15 சீட் கிடைத்திருக்கும்: சீமான் பகீர்

தேனி மாவட்டம், கம்பம் வஉசி திடலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதனை ஆதரித்து சீமான் பேசியதாவது: தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் டிடிவி.தினகரன் அவர்களிடம் ஒன்று கேட்கிறேன், நீங்கள் சிறைக்கு போக காரணமாக இருந்தது யார்? சசிகலா குடும்பம் கட்சிக்கும், ஆட்சிக்கும் வரக்கூடாது என்ற திட்டத்தை வகுத்தது யார்? சசிகலாவை சிறை வைத்த பெருமகன் யார்? உங்களை தூக்கி சிறையில் வைத்தது யார்? இவ்வளவும் செய்த மோடியை நீங்கள் நல்லாட்சி தந்த தலைவர் என்று கூறுகிறீர்கள்.

உங்கள் கட்சியை இரண்டாக உடைத்து இரட்டை இலையை பறித்து எடப்பாடிக்கு கொடுத்ததும் இந்த மோடி தான். ஆனால் நீங்கள் மோடியிடம் சரணடைந்து விட்டீர்கள். மோடியை மறுமுறையும் பிரதமராக்க நான் பாஜவோடு கூட்டு சேர்ந்திருந்தால், எனக்கு ரூ.1,000 கோடி, 15 சீட்டும் கொடுத்திருப்பார்கள். தொகுதியில் நிறுத்த வேட்பாளர் இல்லாத கட்சி பாஜ. அதனால் இன்று எல்லோரையும் கூப்பிட்டு கூட்டணி வைக்கிறது. இவ்வாறு கூறினார்.

* ‘மோடிக்கு மட்டும் ஓட்டுபோடாதீங்க’
சீமான் கூறுகையில், ‘இங்கு பாஜகவை வளரவிட்டால் நாடும் மக்களும் நாசமாகி போயிடுவோம். உங்களை கையெடுத்து கும்பிடுகிறேன். நீ யாருக்கு வேணும்ணாலும் ஓட்டு போடு. எனக்கு ஓட்டு போடலைன்னாலும் பரவாயில்லை. மோடிக்கு ஓட்டு போடாதீங்க… நீ எனக்கு ஓட்டுபோடலண்ணா எனக்கு நஷ்டமில்ல.. நான் சினிமா எடுப்பேன். கதை எழுதுவேன். இல்லைனா 10 ஏக்கர் நிலம் இருக்கு. உழுது விவசாயம் செய்வேன். ஆனா மோடிக்கு மட்டும் ஓட்டுபோடாதீங்க’ என்றார்.

The post பாஜவுடன் கூட்டு சேர்த்திருந்தால் ரூ.1,000 கோடி, 15 சீட் கிடைத்திருக்கும்: சீமான் பகீர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Seeman Bagir ,Theni District ,Kampam Vausi Thidal ,Seeman ,Naam Tamilar Party ,Madan ,DTV ,Dinakaran ,Sasikala ,Bajaj ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை...