×

இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த ஓபிஎஸ்: ‘பழக்க தோஷம்’ என சமாளிப்பு

பாஜ கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். நேற்று பரமக்குடி சட்டமன்ற தொகுதி முதலூர், முகமதியாபுரம், சத்திரக்குடி, மஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘பலாப்பழம் சின்னத்தை பெறுவதற்கு எந்த அளவிற்கு போராடினேன் என்பது உங்களுக்கு தெரியும். நான் ஒருவர்தான் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் வேட்பு மனு செய்தேன்.

ஆனால் தோட்ட வேலை செய்பவர்கள், கடைகளில் வேலை செய்பவர்களை கூட்டி வந்து நான் கேட்கும் சின்னங்களை அவர்களும் கேட்டனர். பொதுமக்களின் நல்லெண்ணம், ஆசீர்வாதத்தால் எனக்கு பலாப்பழம் சின்னம் விழுந்தது. எனவே, உங்களின் பொன்னான வாக்குகளை நமது வெற்றி சின்னமான ‘இரட்டை இலை’ என்றார். உடனே நிறுத்தி, ‘‘பலாப்பழ சின்னத்தில் முத்திரையிட வேண்டும்.

பழக்க தோஷம் என்ன செய்வது’’ என சமாளித்து பேச்சை தொடர்ந்தார். இரட்டை இலையை கைப்பற்றுவதற்காக தான் தொண்டர்களின் உரிமையை காக்கின்ற போராட்டமாக தர்ம யுத்தத்தை தொடங்கியுள்ளேன். அதிமுகவை கைப்பற்றி நம்பிக்கை துரோகத்தால் என்னை பாடாய்படுத்தி விட்டனர். எனவே அவருக்கு (எடப்பாடி பழனிச்சாமி) சரியான பாடம் புகட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த ஓபிஎஸ்: ‘பழக்க தோஷம்’ என சமாளிப்பு appeared first on Dinakaran.

Tags : OPS ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Ramanathapuram Lok Sabha ,BJP ,Paramakkudi Assembly Constituency Mudalur ,Mohammadiyapuram ,Chatrakkudi ,Manjoor ,Dinakaran ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...