×

யார் யாருடைய ஸ்லீப்பர் செல்: சீமான், அண்ணாமலை

மதுரையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், பாஜவின் ‘பி’ டீம் நாம் தமிழர் அல்ல. நாம் தமிழரின் ‘பி’ டீம்தான் பாஜ. ‘அண்ணாமலை என்னுடைய ஸ்லீப்பர் செல். நான்தான் அவரை பாஜகவிற்கு அனுப்பியுள்ளேன். என் மண் என் மக்கள், வேல் யாத்திரை எல்லாம் நான் எடுத்த முன்னெடுப்புகள்தான். அதனால் மோடி, என் தம்பி அண்ணாமலை, எனக்கு (சீமான்) வேலை செய்கிறார் என்பதை கவனத்தில் வைத்து வேலை செய்யுங்கள்’ என சீமான் பேசியுள்ளார்.

இந்நிலையில், கோவையில் நேற்று அண்ணாமலை பிரசாரத்தில் ஈடுபடடார். அப்போது ‘பாஜவுடன் சேர்ந்தால் யாருக்கும் டெபாசிட் கிடைக்காது. அது யாராக இருந்தாலும் கிடைக்காது என்று சீமான் கூறியிருக்கிறாரே? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அண்ணாமலை, ‘சீமான் அண்ணனுக்கு சின்னம் இல்லை. ஓட்டும் இல்லை. இப்போது அண்ணாமலை மீது சீமான் அண்ணன் உட்கார்ந்துவிட்டார்.

இப்போ அண்ணாமலை சீமானுடைய ஸ்லீப்பர் செல்லா? அப்படியா? அல்லது சீமான் அண்ணாமலையின் ஸ்லீப்பர் செல்லா? சீமான் அண்ணனுக்கு இளைஞர்கள் எந்த பக்கம் வர்றாங்கன்னு தெரியும். பெண்கள், தாய்மார்கள் எந்த பக்கம் வர்றாங்கன்னு தெரியும். இன்றைக்கு களத்தில் பாஜ தனித்து நிற்கிறது. இது மக்களுக்கு தெரியும். சீமான் அண்ணனை பொறுத்தவரைக்கும் அப்படி பேசத்தான் செய்வார். அதை கண்டுகொள்ளாதீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

‘கச்சத்தீவை மீட்பது டிராமா’
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாவட்டம் மணப்பாறை பெரியார் சிலை அருகே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையாவிற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,‘ இந்த தேர்தலில் எனக்கு ஓட்டு போடு. போடாமல் போனால் நோட்டாவிற்கு ஓட்டு போடாதீர்கள். காரணம் குறைந்த ஓட்டில் யாராவது ஒருவர் ஜெயித்து விடுவார். நோட்டா ஒருபோதும் ஜெயிக்காது. அநீதிக்கு எதிராக இந்த ஆயுதத்தை பயன்படுத்துங்கள். கச்சத்தீவு எடுப்பேன் என்பது ஒரு டிராமா. இந்திய ராணுவ படை, ஏன் மக்களை பாதுகாக்கவில்லை. அதற்கு மாறாக நான் நெய்தல் படை என்று ஒரு படையை அமைப்பேன்’ என்றார்.

The post யார் யாருடைய ஸ்லீப்பர் செல்: சீமான், அண்ணாமலை appeared first on Dinakaran.

Tags : Seeman ,Annamalai ,Naam Tamilar Party ,Madurai ,BJP ,Naam Tamils ,Tamils ,Sleeper Cell ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...