×

மது குடிப்பது ஜனநாயகமாம்… கள்ளுக்கடையை திறக்கணுமாம்…தகரப்பெட்டியின் அடடா யோசனை

கோவை சின்ன தடாகம் பகுதியில் பாஜக வேட்பாளரும், கட்சி மாநில தலைவருமான அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: மது குடிப்பது என்பது ஜனநாயகம். யாரையும் குடிக்கக்கூடாது என்று சொல்ல முடியாது. கள்ளுக்கடை திறக்க வேண்டும் என பாஜ வலியுறுத்தி வருகிறது. டாஸ்மாக் மூடப்பட வேண்டும். கள்ளுக்கடை திறக்கப்பட வேண்டும்.

டாஸ்மாக் பணம் கட்சி, அரசியல்வாதி சார்ந்து போகிறது. கள்ளுக்கடை விவசாயிகளுக்கு பலன் அளிக்கும். கச்சத்தீவு ஆர்.டி.ஐ அறிக்கை நான் கொடுத்து வாங்கியது. இதை பச்சை பொய் என்று சொல்வதா?. இந்த டாக்குமெண்டை நாங்களே உருவாக்கினோமா, எந்த அதிகாரி கையெழுத்து போட்டார் என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களும் வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* ‘சுப்பிரமணியசுவாமி பாஜவிலேயே இல்லையாம்…’
கச்சத்தீவு விவகாரம் பாஜ வேடம் போடுகிறது என்று பாஜ எம்பி சுப்பிரமணியசுவாமி தெரிவித்திருந்தார். இதுகுறித்து அண்ணாமலையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சுப்பிரமணியசுவாமி போன்றோர் இத்தனை ஆண்டு காலம் என்ன செய்து கொண்டு இருந்தனர்?. அவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்.

இத்தனை ஆண்டு காலமாக செய்ய தவறியவர்கள், இப்போது நான் செய்யும்போது என் மீது பாய்வதில் என்ன நியாயம்?. சுப்ரமணிய சுவாமி எங்கள் கட்சி தலைவர் கிடையாது. 5 ஆண்டுகளாக அவர் மோடியை திட்டிக்கொண்டு இருக்கின்றார். அவர் யார்? என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் வயதுக்கு மரியாதை கொடுத்து அமைதியாக இருக்கின்றோம்’ என்றார்.

* 10 ஆண்டு என்ன செய்தீங்க? விட்டாரு பாரு ஒரு ஓட்டம்…
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘இங்கே நாங்க ஜெயிச்சு, அதாவது ஜூன் 4ம் தேதியிலிருந்து 100 நாள்ல என்சிபி என்ற போதை கட்டுப்பாட்டு மையம் துவக்குவோம்’’ என்றார். இதை கேட்ட மக்கள், ‘ஆமா, ஆட்சியில 10 வருஷமா இருந்தீங்க, இதுவரை செய்யாம 100 நாள்ல செய்வாங்களாம்’ என கிண்டல் செய்தனர். ‘‘கோவை விமான நிலையம், ரயில் நிலையம், உள் கட்டமைப்பு எல்லாம் மாற்ற போகிறோம்.

நீங்க மறுபடியும் எங்களுக்கு ஆதரவு தரணும்’’ என கேட்டபோது, ‘‘10 ஆண்டு ஆட்சியில என்ன செய்தீங்க?’’ என மக்கள் கேள்வி எழுப்பினர். ‘‘அண்ணா… என்னங்கண்ணா…’ என கேட்டும் கேட்காததுபோல் நடித்த அண்ணாமலை, ‘‘ரொம்ப டிராபிக்கா இருக்கா, ஸ்கூல் எக்சாம் டைம், இப்போ நாம வழி விடாம இருந்தா தப்பா போயிரும். எல்லாரும் கிளம்புங்க’’ எனக்கூறி புறப்பட்டார்.

The post மது குடிப்பது ஜனநாயகமாம்… கள்ளுக்கடையை திறக்கணுமாம்…தகரப்பெட்டியின் அடடா யோசனை appeared first on Dinakaran.

Tags : Annamalai ,BJP ,Goi ,BAJA ,Dada ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...