×

தேர்தல் களத்தில் திரைப்பட நட்சத்திரங்கள்

தேர்தல் களத்தில் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள் மட்டுமின்றி நடிகர், நடிகைகளும் ‘பிரசாரம்’ செய்கின்றனர். அதற்கு வழக்கம் போல் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பட்டியல் கொடுத்து அனுமதி வாங்க வேண்டும்.
அப்படி கட்சி வாரியாக வழங்கிய பட்டியலில் உள்ள நட்சத்திரங்கள்

* திமுக: திண்டுக்கல் லியோனி, வாகை சந்திரசேகர், கருணாஸ், கமல்ஹாசன்

* காங்கிரஸ்: விஜயசாந்தி

* அதிமுக: விந்தியா, கவுதமி, காயத்ரி ரகுராம், ரவி மரியா, சிங்கமுத்து, ஆர்.சுந்தரராஜன்

* நாம் தமிழர் கட்சி: சீமான்

* பாஜ: குஷ்பு சுந்தர், சரத்குமார், செந்தில்

* அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்: சி.ஆர்.சரஸ்வதி

* அகில இந்திய எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்: வனிதா விஜயகுமார்

* அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம்: புவனேஸ்வரி

* மக்கள் நீதி மய்யம்: கமல்ஹாசன், சினேகன்

* இவர்களை தவிர பட்டியலில் உள்ள உதயநிதி ஸ்டாலின், நாஞ்சில் சம்பத் (திமுக), திருமாவளவன் (விசிக), சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்) ஆகியோர் திரைப்படங்களில் நடித்துள்ளனர். கூடவே நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

* நடிகை ரோகிணி நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

* இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த 38 கட்சிகள் தமிழ்நாட்டில் பேச 807 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தமிழ்நாடு தேர்தல் அதிகாரியிடம் அனுமதி வாங்கியுள்ளன.

* திமுக, காங்கிரஸ், அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜ, பகுஜன் சமாஜ், தேமுதிக ஆகிய கட்சிகள் அதிகபட்சமாக 40 பேச்சாளர்களுக்கு அனுமதி பெற்றுள்ளன.

* விசிக, தமாக (மூ), பாமக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தலா 20 நட்சத்திர பேச்சாளர்களை பயன்படுத்த உள்ளனர்.

* இந்த கட்சிகளில் குறைந்தபட்சமாக அகில இந்திய இளைஞர் மேம்பாட்டுக் கட்சி ஒரே ஒரு பேச்சாளருக்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளது.

* நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் அந்தந்த கட்சிகளின் மாநில, தேசிய தலைவர்கள், நிர்வாகிகள் இடம் பிடித்துள்ளனர்.

* பாஜவின் தமிழ்நாடு முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பெயர் நட்சத்திர பட்டியலில் இடம் பெறவில்லை.

* வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூரலிகானின் கட்சியான ‘இந்திய ஜனநாயக புலிகள்’ நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் ஏதும் தரவில்லை. தனியாளாக பிரசாரம் செய்து வருகிறார்.

* அதேபோல் நடிகர் ராஜேந்திர பிரசாத் (தேமுதிக) கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெறாவிட்டாலும் பிரசாரம் செய்கிறார்.

* தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் அதிகபட்சமாக 40, பதிவு செய்த கட்சிகள் அதிகபட்சமாக 20 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி பெற முடியும்.

* இந்த அனுமதி மூலம் தொகுதிகளுக்கு சென்று நட்சத்திர வேட்பாளர்கள் பிரசாரம் செய்யும் செலவுகள் வேட்பாளர்களின் கணக்கில் சேராது. கட்சியின் செலவாக கணக்கில் கொள்ளப்படும். கட்சிகள் ஆண்டுக்கொருமுறை வரவு செலவுகளை தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்தால் போதும். தேர்தலுக்கு இவ்வளவுதான் செய்ய வேண்டும் என்ற வரையறைக்குள் கட்சிகள் வராது.

The post தேர்தல் களத்தில் திரைப்பட நட்சத்திரங்கள் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...