×

ஜி.கே.வாசன் 2ம் கட்டமாக தென்மாவட்டங்களில் பிரசாரம்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் கடந்த 27ம்தேதி முதல் பிரசாரம் செய்து வருகிறார். முதல் கட்ட பிரசாரத்தை முடித்த நிலையில், தற்போது 2-வது கட்ட பிரச்சாரத்தை நேற்று முதல் தொடங்கினார். 2ம் கட்ட பிரசாரம் குறித்த விபரம்: தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை தொகுதிகளில் நேற்று பிரசாரம் செய்த நிலையில் இன்று தூத்துக்குடி தொகுதியிலும், 4ம்தேதி விருதுநகர், தேனி தொகுதிகளிலும், 5ம் தேதி சிதம்பரம்,

நாகை, மயிலாடுதுறை தொகுதிகளிலும், 6ம் தேதி ஈரோடு, கரூர் தொகுதிகளிலும், 7ம் தேதி கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளிலும், 8ம் தேதி ஈரோடு, திருப்பூர் தொகுதிகளிலும், 9, 10ம் தேதி தூத்துக்குடி தொகுதியிலும், 11ம் தேதி நாமக்கல், சேலம், தர்மபுரி, வேலூர் தொகுதிகளிலும், 12ம் தேதி ஈரோடு தொகுதியிலும், 13ம் தேதி திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளிலும், 15ம் தேதி தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் தொகுதிகளிலும், 16ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.

The post ஜி.கே.வாசன் 2ம் கட்டமாக தென்மாவட்டங்களில் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,CHENNAI ,Tamaga ,President ,Tamil Nadu ,National Democratic Alliance ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...