- வலங்கைமான்
- தஞ்சாவூர் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- தஞ்சாவூர்
- டாக்டர்
- செல்வி
- சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
- வேளாண் கல்லூரி
- தின மலர்
வலங்கைமான், ஏப். 3: தஞ்சாவூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் களப்பணியின் ஒரு பகுதியாக வலங்கைமான் வேளாண் உதவி இயக்குனருடன் கலந்துரையாடினார். தஞ்சாவூர் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று வலங்கைமான் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்குச் சென்று வேளாண் உதவி இயக்குனர் சூரியமூர்த்தியிடம் (பொ) அங்குள்ள பயிர் வகைகள், வேளாண்மைக்கு உட்பட்ட நிலப்பரப்பு, விளைச்சல் விவரங்கள், நீர் பாசன வசதி குறித்து கேட்டு அறிந்தனர். மேலும் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தின் நிறுவன அமைப்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்தும் மாணவிகள் கலந்துரையாடினர்.
The post வேளாண் கல்லூரி மாணவர்கள் கலந்துரையாடல் appeared first on Dinakaran.