- மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி
- தர்மபுரி
- ஊனமுற்றோர் நலத்துறை
- மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி
- தின மலர்
தர்மபுரி, ஏப்.3: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தர்மபுரியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்பு மற்றும் வாகன பேரணி, நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். காவல் பொது பார்வையாளர் விவேக்சியாம் முன்னிலை வகித்தார். விழிப்புணர்வு வாகன பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம் ) பத்ஹூ முகம்மது நசீர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி appeared first on Dinakaran.