×

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

விழுப்புரம், ஏப். 3: திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே பரங்கனி கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் ராஜேந்திரன்(28). இவர் கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகியுள்ளார். இந்நிலையில் 2020 ஜூலை 17ம் தேதி அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை தொடர்ந்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது ராஜேந்திரன் திருமணத்திற்கு மறுத்து ஏமாற்றி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹர்மிஸ் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் அரசு தரப்பில் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜேந்திரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

The post திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Barangani ,Kotakuppam, Villupuram district ,Dinakaran ,
× RELATED மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக கூறப்பட்ட...