- குமாரி அரசு மருத்துவக் கல்லூரி
- நாகர்கோவில்
- சிவந்திபட்டி
- திருநெல்வேலி
- மதுரை
- நர்சிங் டிரெனிங்க்
- கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- செவிலியர்
- மேஜிக் கோயில் விழா
- அம்பலம்
நாகர்கோவில், ஏப்.3: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள செவிலியர் பயிற்சி கல்லூரியில் திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி பகுதியை சேர்ந்த மாணவி மூன்றாம் ஆண்டும், மதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டாம் ஆண்டும் படித்து வருகிறார்கள். 2 பேரும் நெருங்கிய தோழிகளாக இருந்து வந்தனர். ஒரே அறையில் தங்கி இருந்ததுடன் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை செவிலியர் விடுதியில் இருந்து ஒன்றாக சேர்ந்து வகுப்புக்கு சென்றவர்கள் மதியம் 1 மணிக்கு விடுதியில் உணவருந்த வரவில்லை. இதனால் விடுதி காப்பாளர் லதா மற்ற மாணவிகளிடம் விசாரித்தார். ஆனால் அவர்களுக்கும் இருவரும் எங்கு சென்றனர் என்பது குறித்து எந்த தகவலும் ெதரியவில்லை.
இதையடுத்து உடனடியாக விடுதி கண்காணிப்பாளர் லதா, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பயசிடம் தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் இது தொடர்பாக ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு மாணவிகள் குறித்து விசாரித்தனர். மாணவிகளின் குடும்பத்தினர், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்களின் உறவினர்களும் தேடினர். அப்போது தான் சிவந்திப்பட்டியில் நடந்த ஒரு கோயில் திருவிழாவுக்கு யாரிடமும் சொல்லாமல் மாணவிகள் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை அழைத்து வருமாறு குடும்பத்தினரிடம் போலீசார் கூறினர். ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதால், மாணவிகள் நேரில் வந்ததும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அனுப்பி வைக்கப்படுவார்கள் என போலீசார் கூறினர்.
The post குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் பயிற்சி மாணவிகள் 2 பேர் திடீர் மாயம் கோயில் திருவிழாவுக்கு ரகசியமாக சென்றது அம்பலம் appeared first on Dinakaran.