×

தேர்தல் ஆணையம் வெளியீடு: எது உண்மை, எது பொய்? புது வெப்சைட்டில் பாருங்க

புதுடெல்லி: தேர்தலில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும், தேர்தல் நடைமுறையின் நேர்மையை நிலைநிறுத்தவும் ‘கட்டுக்கதை எதிர் உண்மை பதிவேடு’ என்கிற தலைப்பில் புதிய இணையதளத்தை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. https://mythvsreality.eci.gov.in/ எனும் இந்த இணையதளத்தை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், ஒப்புகைச் சீட்டு இயந்திரம், வாக்காளர் பட்டியல், வாக்காளர் சேவைகள், தேர்தல்களை நடத்துதல் மற்றும் பிறவற்றைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்களுக்கு பதிலளிக்கிறது. போலி வீடியோக்களையும் அடையாளப்படுத்தி உண்மை தகவல்களை விளக்குகிறது.

The post தேர்தல் ஆணையம் வெளியீடு: எது உண்மை, எது பொய்? புது வெப்சைட்டில் பாருங்க appeared first on Dinakaran.

Tags : Election Commission ,NEW DELHI ,Chief Election Commissioner ,Rajiv ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...