×

பெரியபாளையம் காவல் நிலையத்தில் பறிமுதல் வாகனங்களை ஏலம் விட வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியபாளையம் காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர், சப் – இன்ஸ்பெக்டர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இங்கு பறிமுதல் செய்யபட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் காவல் நிலையம் முன்பும், காவலர் குடியிருப்பு பகுதிகளிலும் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் எதற்குமே உதவாமல் துருப்பிடித்து காயலான்கடைக்குச் செல்லும் நிலையில் உள்ளன. இந்நிலையில் பல நாட்களாக மக்கி மண்ணோடு மண்ணாகி வரும் இந்த வாகனங்களை ஏலம் விட வேண்டும் அல்லது வாகனங்கள் மீதுள்ள வழக்குகளை விரைந்து முடித்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வாகன உரிமையாளர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் காவல் நிலையத்தில் பறிமுதல் வாகனங்களை ஏலம் விட வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Periyapalayam police station ,Uthukkottai ,Dinakaran ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்