×

கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு: கொலையா என விசாரணை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சிறுவல்பேட்டை ஊராட்சியில் சிமென்ட் கலவை மிஷின் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையின் காவலாளியாக பொன்னேரி பெரியகாவனம் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை (73) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் அண்ணாமலை பணிக்கு வந்துள்ளார். நேற்று காலை 7 மணியளவில் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் படுகாயத்துடன் அண்ணாமலை சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவலை அறிந்ததும் அண்ணாமலையின் உறவினர்கள் கோட்டக்கரை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு, அங்கு இருந்த தொழிற்சாலை நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், அண்ணாமலையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு அண்ணாமலையின் தலை மற்றும் காதுகளில் ரத்தம் வடிவதையும் எழுத்து மூலமாக பதிவு செய்து கொண்டனர். மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காவலாளி அண்ணாமலை திடீரென மயங்கி விழுந்ததில் தலை மற்றும் காதுகளில் ரத்தம் வடிந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலை காவலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு: கொலையா என விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Siruvalpet Panchayat ,Annamalai ,Periyakavanam ,Ponneri ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில்...