×

திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து பிரசாரம் கடந்த 10 ஆண்டுகளாக மோடியால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை: ஒன்றிய அரசு மீது சுந்தர் எம்எல்ஏ கடும் தாக்கு

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில், திமுக சார்பில் மூன்றாவது முறையாக போட்டியிடும் வேட்பாளர் செல்வம் நேற்று வெங்கச்சேரி, ஆதவப்பாக்கம், காவாம்பயிர், கருவேப்பம்பூண்டி, மேல்பாக்கம், பெருநகர், விச்சூர், திருப்புலிவனம் மற்றும் உத்திரமேரூர் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வெங்கசேரி அருகே காவாம்பயிர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து, அப்பகுதியில் உள்ள விவசாய பகுதிகளுக்கு சென்று வேர்கடலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு உதவியாக வயலில் இறங்கி வேர்க்கடலை பறித்துக் கொடுத்து துண்டு பிரசுரம் வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதனைத்தொடர்ந்து, ஆதவப்பாக்கம் கிராமத்தில் கூடியிருந்த பெண்களிடம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் எம்எல்ஏவுமான சுந்தர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது, அவர் பேசுகையில், ‘பத்து ஆண்டுகளாக கச்சத்தீவு பற்றியும் மீனவர்கள் பற்றியும் பேசாத பிரதமர் மோடி தற்போது பேசி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இவர்களால் யாருக்கும் எந்த நன்மையும் கிடையாது. டெல்லியில் திமுக கூட்டணி ஆட்சி வெற்றி பெற்றால் காஸ் விலை ரூ.500க்கு வழங்கப்படும். பிரதமர் மோடி ரூ.400க்கு விற்ற காஸ் சிலிண்டரை ரூ.1000க்கு விற்பனை செய்து வருகிறார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 2 ஆயிரம் ரூபாய்க்கு சிலிண்டர் விலையை உயர்த்தி விடுவார். திமுக வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்றால் காஸ் சிலிண்டர் விலை ரூ.500 ஆக முதல்வரின் அறிவித்த தேர்தல் அறிக்கையின்படி குறைக்கப்படும்’ என்றார். பிரசாரத்தின்போது, ஒன்றிய செயலாளர் ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல், பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார், விசிக மாவட்ட செயலாளர் எழிலரசன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

The post திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து பிரசாரம் கடந்த 10 ஆண்டுகளாக மோடியால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை: ஒன்றிய அரசு மீது சுந்தர் எம்எல்ஏ கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : DMK ,Selvam Modi ,Sundar ,MLA ,Union Govt. Uthramerur ,Kanchipuram ,Parliamentary ,Constituency ,Selvam ,Venkacherry ,Aadavappakkam ,Kavambair ,Karuvepampoondi ,Melpakkam ,Perunagar ,Vichur ,Tirupulivanam ,Uthramerur ,Modi ,Union Government ,
× RELATED ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள்,...