ஜெருசேலம்: கத்தார் செய்தி சேனலான ‘அல் ஜசீரா’ என்ற செய்தி நிறுவனத்திற்கு இஸ்ரேல் பிரதமர் தடை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. கத்தாரில் இருந்து ஒளிபரப்பு செய்யப்படும் செய்தி சேனலான ‘அல் ஜசீரா’ என்ற செய்தி நிறுவனம், இஸ்ரேலுக்கு எதிராக ெதாடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்ததால், அந்த செய்தி சேனலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தடை விதித்துள்ளார்.
இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இஸ்ரேலுக்கு எதிராக ‘அல் ஜசீரா’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சேனலை தீவிரவாத சேனல் என்று கருதுகிறோம். இந்த சேனல் ஒளிபரப்பை தடை செய்யும் பொருட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. உடனடியாக இந்த தீவிரவாத சேனலின் ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது. எனவே ‘அல் ஜசீரா’ என்ற தீவிரவாத சேனல் இனிமேல் இஸ்ரேலில் ஒளிபரப்பப்படாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post கத்தார் செய்தி சேனலுக்கு தடை: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு appeared first on Dinakaran.