×

குடும்ப பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றதால் கணவரை கொன்றால் ₹50,000 பரிசு தொகை: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த பெண் மீது வழக்கு

ஆக்ரா: கணவரை கொன்றால் ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் பிண்டியைச் சேர்ந்த பெண்ணுக்கும், உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த பாஹ் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்தாண்டு ஜூலையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, இருவரும் ஆக்ராவில் வசித்து வந்தார். ஆனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன.

திருமணமான ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அந்தப் பெண் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். தனது பெற்றோருடன் வசித்து வந்த அவர், தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டு பிந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து தனது மனைவியின் பெற்றோர் தன்னை மிரட்டியதாக அந்த வாலிபரும் போலீசில் புகார் அளித்தார்.

இரு தரப்பினரையும் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தனது கணவரைக் கொல்பவருக்கு ரூ. 50,000 பரிசு வழங்கப்படும் என்று தனது செல்போனில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பதிவிட்டார். அதை பார்த்த அந்த வாலிபர், அதனை ஸ்கீரின் ஷாட் எடுத்து, மீண்டும் போலீசில் மற்றொரு புகாரை அளித்தார். அதையடுத்து அந்த பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக பாஹ் இன்ஸ்பெக்டர் ஷியாம் சிங் தெரிவித்தார்.

The post குடும்ப பிரச்னை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றதால் கணவரை கொன்றால் ₹50,000 பரிசு தொகை: வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த பெண் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Agra ,Pindi ,Madhya Pradesh ,Bah ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிராவில் பேருந்தும், லாரியும்...