×

இறங்குமுகம் காணும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள்; சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிந்து 73,904 புள்ளிகளானது…!!

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் குறைந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிந்து 73,904 புள்ளிகளானது. கோட்டக் வங்கி, எச்.சி.எல்.டெக் பங்குகள் தலா 1.8%, ஐசிஐசிஐ வங்கிப் பங்கு 1.6% டிசிஎஸ், இன்போசிஸ் பங்குகள் 0.8% விலை குறைந்தது. எல்&டி, விப்ரோ, பார்த்தி ஏர்டெல், டெக் மகிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், சன் பார்மா பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாயின.

எம்&எம் பங்கு 2.9%, நெஸ்லே பங்கு 1.4%, டாடா மோட்டார்ஸ், எஸ்.பி.ஐ., இண்டஸ்இண்ட் வங்கி பங்குகள் தலா 1% விலை உயர்ந்தன. டாடா ஸ்டீல், JSW ஸ்டீல், அல்ட்ராடெக், என்.டி.பி.சி., பஜாஜ் ஃபின்செர்வ் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 9 புள்ளிகள் குறைந்து 22,453 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. நேற்று 2024-25-ம் நிதி ஆண்டின் முதல் நாளிலேயே புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள், உயர்வுடன் முடிந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 603 புள்ளிகள் உயர்ந்து 74,254-புள்ளிகளில் புதிய உச்சம் தொட்டது. இதேபோல் வர்த்தக நேர முடிவில் நிஃப்டி 135 புள்ளிகள் உயர்வுடன் 22,462 புள்ளிகளில் நிறைவடைந்தது. இந்நிலையில், வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட இன்றைய பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் குறைந்து முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

The post இறங்குமுகம் காணும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள்; சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிந்து 73,904 புள்ளிகளானது…!! appeared first on Dinakaran.

Tags : Sensex ,MUMBAI ,BSE Sensex ,Kotak Bank ,HCLTech ,ICICI Bank ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!