×

மக்களவை தேர்தலில் EVM – VVPAT ஒரே இணைப்பில் வைக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக ரீட் மனுதாக்கல்


சென்னை: மக்களவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் -ஒப்புகைசீட்டு இயந்திரத்தை ஒரே இணைப்பில் வைக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. தேர்தல் ஆணையத்தால் வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்படும் EVM -ல் உள்ள சில குறைபாடுகளை சரி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினார்.

இக்கடிதத்தின்மீது இன்று வரை தேர்தல் ஆணையம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், கழகத்தால் சுட்டிக் காட்டுப்பட்டுள்ள குறைபாட்டினை சரி செய்யக் கோரி, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சார்பில் இன்று (2.4.2024) சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நடந்த தேர்தல்களில் EVM – VVPAT ஒரே இணைக்கவும் கண்ட்ரோல் யூனிட் தனியாகவும் வைத்து பயன்படுத்தப்பட்டது. வரும் மக்களவை தேர்தலில் மூன்றையும் ஒரே இணைப்பில் வைத்து பயன்படுத்த திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மூன்று எந்திரங்களும் ஓரே இணைப்பில் வைக்கப்படுவதால் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. தேர்தல் விதிகளுக்கு எதிரான நடவடிக்கையை கைய்விடும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

EVM – கண்ட்ரோல் யூனிட் இடையே VVPAT எந்திரத்தை வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று திமுக தெரிவித்துள்ளது. அண்மை காலமாக மின்னனு வாக்கு எந்திரம், ஒப்புகை சீட்டு எந்திர பயன்பாடு குறித்து அனைத்து தரப்பினர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆர்.எஸ்.பாரதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.

The post மக்களவை தேர்தலில் EVM – VVPAT ஒரே இணைப்பில் வைக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக ரீட் மனுதாக்கல் appeared first on Dinakaran.

Tags : DMK ,ICourt ,Lok Sabha ,CHENNAI ,Election Commission ,Reed ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் கூட்டணி...