×

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பணம் வாங்கிக் கொண்டு பிரச்சாரம் செய்ய வந்ததாகக் கூறி முன்னாள் நிர்வாகி மீது இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் தாக்குதல் நடத்தினர். ஐ.ஜே.கே.வில் இருந்து நீக்கப்பட்ட சத்தியவேல் என்பவர் தனது புகைப்படத்துடன் கூடிய பிரச்சார வாகனத்தில் வந்துள்ளார். ஐ.ஜே.கே. மாநில அமைப்பாளர் அண்ணாதுரை, அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து திடீரென சத்தியவேலை சுற்றிவளைத்து தாக்கினர். சத்தியவேலை தாக்கியதுடன் அவரது பிரச்சார வாகனத்தில் இருந்த பேனரையும் கிழித்து எறிந்தனர்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும் மாநில அமைப்பாளர் எனக் கூறி சத்தியவேல் பணம் பறித்து வருவதாக அண்ணாதுரை புகார் தெரிவித்துள்ளார். தற்போது பாஜகவிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுக் கொண்டு பிரச்சாரம் செய்ய வந்த சத்தியவேலை அடித்து விரட்டியதாக அண்ணாதுரை பேட்டியளித்துள்ளார். பாஜக தலைமை அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

The post புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் மோதிக் கொண்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry BJP ,Indian Democratic Party ,Puducherry ,Democratic Party of India ,Dinakaran ,
× RELATED லால்குடி அருகே பாரிவேந்தரின் இந்திய...