சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (64) காலமானார். 2022 ஆண்டு முதல் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் திரையுலகினர் இடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி காமெடி நடிகர் சேஷு காலமானார். அவரை தொடர்ந்து 29ம் தேதி நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பு காரணமாக காலமானார். இந்நிலையில் தற்போது காமெடி மற்றும் குணச்சித்ர நடிகரான விஸ்வேஷ்வர ராவ் காலமானார்.
ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட விஸ்வேஷ்வர ராவ் தமிழ், தெலுங்கில் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பிதாமகன், உன்னை நினைத்து உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரையிலும் நடித்துள்ளார்
இந்நிலையில் சென்னையில் சிறுசேரி பகுதியில் வசித்து வந்த விஸ்வேஷ்வர ராவ் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார். 2022 ஆண்டு முதல் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளது.
The post புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஸ்வேஷ்வர ராவ்(62) காலமானார்! appeared first on Dinakaran.