×

ஐஎஸ் கால்பந்து தொடர்; பஞ்சாப்-ஒடிசா இன்று மோதல்

புவனேஸ்வர்: 12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் எப்.சி – ஒடிசா எப்.சி அணிகள் மோத உள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்த லீக் போட்டிகளின் முடிவில் ஒடிசா அணி 19 போட்டிகளில் ஆடி 10 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி கண்டு 36 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

அதே வேளையில் பஞ்சாப் அணி 19 போட்டிகளில் ஆடி 5 வெற்றி, 6 டிரா, 8 தோல்வி கண்டு 21 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

The post ஐஎஸ் கால்பந்து தொடர்; பஞ்சாப்-ஒடிசா இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : IS Football Series ,Punjab ,Odisha ,Bhubaneswar ,Indian Super League ,ISL ,series ,Punjab FC ,Odisha FC ,Dinakaran ,
× RELATED பஞ்சாப் பேரவை இடைத்தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி