தண்டையார்பேட்டை: நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும்விதமாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஒவ்வொரு தொகுதியிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உரிய ஆவணமின்றி கொண்டு வரப்படும் பணம், பரிசு பொருட்கள் மற்றும் தங்க நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர். நேற்று இரவு புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பழனி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்தபோது, அவரிடம் உரிய ஆவணமின்றி 3 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் திருவொற்றியூர் ராஜா கடை பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் ரவீந்திரகுமார் என்பதும், கடையில் விற்பனையான பணத்தை கொண்டு வந்ததாக கூறியுள்ளார். இருப்பினும் உரிய ஆவணம்இல்லாததால் பணம் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதுபோல் நேற்று இரவு ராயபுரம் மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி குறிஞ்சி முருகன் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது சந்தேகப்படும்படி வந்தவரை மடக்கி சோதனை செய்தபோது அவரிடம் உரிய ஆவணமின்றி 3 லட்ச ரூபாய் இருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், அருண் என்பது தெரியவந்தது. உரிய ஆவணமின்றி பணம் எடுத்து வந்ததால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
The post புதுவண்ணாரப்பேட்டை, ராயபுரத்தில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ₹6 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும்படை அதிரடி appeared first on Dinakaran.