×

ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’ ஆன வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா

மும்பை: ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’ ஆன வீரர் என்ற மோசமான சாதனையை மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் 17 முறை ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளனர்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 14வது லீக் போட்டியில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி ஹாட்ரிக் தோல்வியை தழுவியுள்ளது.

நேற்று நடைபெற போட்டியில் டிரென்ட் போல்ட் முதல் ஓவரை வீசினார். அப்போது அந்த ஓவரில் 5வது பந்தை எதிர்கொண்ட ரோஹித் ஷர்மா டக் அவுட் ஆகி வெளியேறினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17வது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் ரோஹித் ஆட்டமிழந்துள்ளார்.

இது ஒரு மோசமான சாதனையாக அமைந்துள்ளது. இந்த மோசமான சாதனையை ரோஹித் சர்மாவும், தினேஷ் கார்த்திக்கும் பகிர்ந்துள்ளனர். இருவரும் 17 முறை ரன் ஏதும் எடுக்காமல் அட்டமிழந்துள்ளனர். இதேபோன்று பியூஷ் சாவ்லா, மன்தீப் சிங், சுனில் நரேன், கிளென் மேக்ஸ்வெல், ஆகியோர் தலா 15 முறை ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து 2 வது இடத்தில் உள்ளனர்.

The post ஐபிஎல் தொடரில் அதிக முறை ‘டக் அவுட்’ ஆன வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார் ரோஹித் ஷர்மா appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,IPL ,Mumbai ,Mumbai Indians ,Dinesh Karthik ,Dinakaran ,
× RELATED சுப்மன் கில் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்!: அமித் மிஸ்ரா