×

டெல்லி கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

டெல்லி கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துளளது. அரசியல் நடவடிக்கைகளில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஈடுபட அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கில், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் தொடர்ந்து சிறையில் இருப்பது குறித்து ED-க்கு உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.

உண்மை என்னவென்றால், இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் சஞ்சய் சிங்-ஐ 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும். அப்ரூவராக மாறியவரின் வாக்குமூலத்தை தவிர சஞ்சய் சிங்குக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டு வந்தனர்.

உச்சநீதிமன்றத்தின் சரமாரி கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒன்றிய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திணறி வருகிறார். நாளை வரை அவகாசம் வழங்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் வழங்குவது தொடர்பான நிலைப்பாட்டை சற்று நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என அமலாக்கத்துறைக்கு கேடு வைத்தது. 2 மணிக்குள் ஒன்றிய அரசிடம் இருந்து பதிலை பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க அமலாக்கத்துறை வழக்கறிஞருக்கு உச்சநீதிமன்றம் கெடு வைத்துள்ளது.

டெல்லியில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபானக் கொள்கையை அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபானக் கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம்சாட்டின. இரு புலனாய்வு அமைப்புகளும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லியில் உள்ள சஞ்சய் சிங் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அக்.4ம் தேதி காலை 7.30 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக சஞ்சய் சிங்கை அவரது வீட்டில் வைத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மதுபானக் கொள்கை முறைகேட்டில் முக்கிய நபராக இவர் செயல்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணையில் ஒன்றிய அரசின் வழக்கறிஞரை நீதிபதிகள் சரமாரி கேள்வி கேட்டுள்ளனர். இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை அதனால் அவரை காவலில் வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லி கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சஞ்சய் சிங் விடுதலை செய்யப்படுவார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரசியல் நடவடிக்கைகளில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஈடுபட அனுமதி அளித்தும் உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post டெல்லி கலால் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Yes Atmi ,Sanjay Singh ,Delhi ,Atmi ,Aadmi M. B. ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...