×

மும்பை அணியின் ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து செல்வோம்: ஹர்திக் பாண்டியா

மும்பை: நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. நேற்று நடைபெற்ற 14வது லீக் போட்டியில் ராஜஸ்தான் – மும்பை அணிகள் மோதின. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இதனால் மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

இந்த போட்டி முடிந்த பின்னர் தோல்விக்கான காரணம் குறித்து மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது; “நாங்கள் 150 முதல் 160 ரன்களை எடுப்பதற்கு ஒரு தகுதியான நிலையில் தான் இருந்தோம். அதன் பிறகு எனது விக்கெட் தான் ஆட்டத்தை மாற்றியது. ராஜஸ்தான் அணிமைய மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வந்ததும் எனது விக்கெட் தான். மேலும், என்னால் சிறப்பாக செய்திருக்க முடியும் ஆனால் என்னால் முடியவில்லை.

நாம் முடிவு எடுப்பது சில சமயங்களில் அது நடக்காமல் போய்விடும். இந்த தோல்வி என்னை ஆச்சரியப்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. ஆனால், இந்த தோல்வியிலிருந்து ஒரு குழுவாக நாங்கள் முன்னோக்கிச் செல்வோம் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், நாங்கள் இன்னும் ஒழுக்கமாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும்’, என கூறினார்.

அதனை தொடர்ந்து இன்று பாண்டியா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; “உங்களுக்கு ஒன்றே ஒன்று எங்கள் அணியை பற்றி நன்றாக தெரியும், நாங்கள் ஒரு போதும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாங்கள் தொடர்ந்து போராடுவோம், முன்னோக்கி செல்வோம்” என மும்பை அணியின் ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

The post மும்பை அணியின் ரசிகர்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து செல்வோம்: ஹர்திக் பாண்டியா appeared first on Dinakaran.

Tags : Hardik Pandya ,Mumbai ,IPL ,Mumbai Indians ,Rajasthan ,Dinakaran ,
× RELATED இலங்கை தொடரில் ஹர்திக் கேப்டன்?