டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு தன்னை மிரட்டியதாக டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அதிஷி, பாஜகவில் சேருங்கள்; இல்லாவிடில் அமலாக்கத்துறை சோதனையை எதிர்கொள்ள தயாராகுங்கள் என தன்னை அச்சுறுத்தியதாக புகார் அளித்துள்ளார். அரசியல் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்றால் பாஜகவில் இணைய வேண்டும். பாஜகவில் சேராவிடில் அடுத்த மாதமே அமலாக்கத்துறை தன்னை கைது செய்யும் என பாஜக மிரட்டியதாக அதிஷி புகார் தெரிவித்திருக்கிறார்.
தனது நெருங்கிய நண்பரை தொடர்பு கொண்டு பேசியதாகவும், பாஜகவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் என்றும் அதிஷி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் அதிஷி, மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அமலாக்கத்துறையால் நான், சவுரவ் பரத்வாஜ், துர்கேஷ் பாடக், ராகவ் சட்டாவை கைது செய்ய பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளது. அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் சௌரவ் பரத்வாஜ் மற்றும் என்னை கொண்டு வந்துள்ளனர். கெஜ்ரிவால், சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி ஒற்றுமையாக வலுவாக இருப்பதாக பாஜக உணர்கிறது. தற்போது ஆம் ஆத்மியின் அடுத்தகட்ட தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர் என தெரிவித்தார்.
The post பாரதிய ஜனதா கட்சியில் சேருமாறு தன்னை மிரட்டுகிறார்கள்: டெல்லி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.