×

நெல்லி மரப் பிள்ளையார்

அறுபத்துமூவரும் விநாயகரும்

நம்பியாண்டார் நம்பிகளின் வேண்டுகோளையேற்றுத் தேவார ஏடுகளை வெளிப்படுத்தியவர் பொள்ளாப்பிள்ளையார் ஆவார். அந்தத் திருமுறைகளில் ஏழாம் திருமுறையான சுந்தரர் பாடல்களில் இடம் பெற்றுள்ளது. திருத்தொண்டத் தொகையாகும். இதுவே அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர்களை வரிசைப்படுத்திக் கூறும் முதல் நூலாகும். இதையே நம்பியாண்டார் நம்பிகள் விரித்து திருத்தொண்டர் திருவந்தாதியாகப் பாடினார். இவை இரண்டையும் அடிப்படையாகக் கொண்டே சேக்கிழார் பெரிய புராணத்தைப் பாடினார். எனவே, அறுபத்துமூவர் வரலாறு வெளிப்படுவதற்குக் காரணமானவர் விநாயகரே ஆவார். அதை நினைவூட்டும் வகையில் அறுபத்துமூவர் வரிசையின் தொடக்கத்தில் பொள்ளாப்பிள்ளையாரையும் அமைக்கும் வழக்கம் வந்தது. அச்சிறுப்பாக்கம் முதலிய சில தலங்களில் அவரை சித்தி, புத்தி தேவியர்களுடன் அமைந்துள்ளனர்.

கோபுரவாசல் எதிர்கொள் கணபதி

சில தலங்களில் சுவாமிக்கு நேராக இராஜகோபுரம் அமையாது. சுவாமி கிழக்கு நோக்கி இருப்பார். ராஜகோபுரம் தென்புறம் தெற்கு நோக்கி இருக்கும். அந்தக் கோபுர வழியாக உட்செல்பவர்கள் முதலில் கண்டு வணங்கும் வகையில் உள்மதில் ஓரமாகத் தெற்கு நோக்கியவாறு சிறிய விநாயகர் சந்நதியை அமைத்திருப்பர். இவர் மிகுந்த சக்தி வாய்ந்தவராகப் போற்றப் படுகிறார். இத்தகைய சந்நதிகளில் சிதறுகாய் உடைத்தால் துன்பம் விரைவில் தொலையும். மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்தில் உள்ள நடன விநாயகர். திருமழிசை ஒத்தாண்டேசுவரர் ஆலய தேவராஜகணபதி, திருமறைக்காடு வேதாரண்யேசுவரர் ஆலய வீரஹத்தி விநாயகர் முதலிய விநாயகர்கள் இவ்வாறு அமைந்த பக்த அனுக்கிரக விநாயகர்கள் ஆவர்.

நெல்லி மரப் பிள்ளையார்

பரணி நட்சத்திரத்தில் 108 தேங்காய் எண்ணெய் விளக்குகள் ஏற்றி, ஏழைகளுக்கு இலவசமாக மருந்துகள் அளித்துவர இரும்புத் தொழிலில் அமோக வியாபாரம் நடக்கும். பெண் குழந்தை இல்லாதவர்களுக்கு பெண் குழந்தையும், மனச்சாந்தியும் கிட்டும்.

தொந்தியில்லாத பிள்ளையார்

பிள்ளையார் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது அவருடைய தும்பிக்கையும், ‘தொந்தி’யும் தான். ‘திருநாரையூர்’ என்ற ஊரின் கோயிலில் பிள்ளையாருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ‘பொல்லாப் பிள்ளையார்,’ என்றழைக்கப்படும் ‘வலம்புரி விநாயகர்.’ கல்லில் தோன்றிய ‘சுயம்பு விநாயகர். சிற்பியில் உளியால் ‘பொள்ளாத’ (செதுக்காத) பிள்ளையார்’ என்றழைக்கப்படுகிறார்.

பெருமாள் கோயிலில் விநாயகர்

சென்னை வேடந்தாங்கல் அருகேயுள்ள அம்ருதபுரி என்ற தலத்தில் அமைந்துள்ளது. னிவாசப் பெருமாள் கோயில். இங்கு அருள்புரியும் விநாயகரை நவகிரக விநாயகர் என்று போற்றுவர். எட்டு அடி உயரம் கொண்ட இந்த விநாயகரின் நெற்றியில் சூரியனும், வயிற்றுப்பகுதியில் சந்திரனும், வலதுகாலில் செவ்வாயும், கீழ்கையில் புதனும், தலைப்பகுதியில் குருவும்இடதுமேல் கையில் ராகுவும், இடதுகாலில் கேதுவும் காட்சி தருகிறார்கள். மேலும் இவரது பின்புறம் யோக நரசிம்மர் திருஉருவமும் உள்ளது. இவரை வழிபட அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதீகம்.

வேப்பமரத்துப் பிள்ளையார்

கிழக்கு முக விநாயகர் விசேஷம் நிறைந்தவர். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவித எண்ணெய் தீபமான பஞ்ச தீபம் ஏற்றிட மனதிற்கேற்ற வரன் அமையும். அலுவலகத்தில் மேலதிகாரியின் அடிமையாய் செயல்புரியும் நிலை அகலும்.

ராதாகிருஷ்ணன்

The post நெல்லி மரப் பிள்ளையார் appeared first on Dinakaran.

Tags : Nellie ,Pollappillaiyar ,Vinayaka Nambiyandar Nambis ,Sundarar ,Nayanmars ,Nellie Marap Pillaiyar ,
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...