×

ராமேஸ்வரம் அருகே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோலப்போட்டி

ராமேஸ்வரம், ஏப்.2: ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் தேர்தலில் நூறு சதவீத நேர்மையான வாக்குப்பதிவை வலியுறுத்தி கோலப்போட்டி நடத்தப்பட்டது. ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அமைந்துள்ள கலாம் தேசிய நினைவகம் முன்பு தேர்தலில் 100% வாக்குப்பதிவு மற்றும் வாக்கு செலுத்துவதின் முக்கியத்துவம் குறித்த ரங்கோலி கோல போட்டி நடைபெற்றது. இதில் அன்னை ஸ்கொலாஸ்டிக்கா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள், சமூக நலத்துறை மற்றும் பசுமை ராமேஸ்வரம் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பலவிதமான வண்ண தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்களை போட்டனர். கலாம் நினைவிடத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ரங்கோலி கோலங்களை பார்வையிட்டு சென்றனர். இந்நிகழ்வை சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அப்துல்ஜபார் ஒருங்கிணைத்தார். கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ராமேஸ்வரம் துணை கண்காணிப்பாளர் உமாதேவி, வட்டாட்சியர் வரதராஜன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

The post ராமேஸ்வரம் அருகே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோலப்போட்டி appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Bakerumbil elections ,Rangoli ,Kalam National Memorial ,Bakerumb ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...