×

ராட்சத பலூன் பறக்கவிட்டு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி. ஏப்.2: ராட்சத பலூனை பறக்க விட்டு வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் பிரதீப்குமார் துவக்கி வைத்தார். நாடாளுமன்ற தோ்தலையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, 100 சதவீத வாக்குப்பதிவு அவசியம் என்பதை உணர்ந்து பொதுமக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பேரணி, கோலமிட்டு விழிப்புணர்வு, கலைநிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ராட்சத பலூனை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதேபோல் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக மேற்பரப்பில் உள்ள திறந்தவௌியில் ராட்சத பலூனை பறக்கவிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களிடம் பூத் சிலிப் வழங்கும் பணியையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன், தலைமை பொறியாளர் சிவபாதம், உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post ராட்சத பலூன் பறக்கவிட்டு 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Collector ,Pradeep Kumar ,Dinakaran ,
× RELATED மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி: மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை