நீடாமங்கலம், ஏப்.2: நீடாமங்கலம் பேரூராட்சி கீழத்தெரு பகுதியில் இஸ்லாமியர்களிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்ககோரி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடை பெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான சாரு மற்றும் மாவட்டத்தில் உள்ள தாலுகா பகுதிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தாசில்தார், துணை தாசில்தார் உள்ளிட்டோர் அந்தந்தப் பகுதிகளில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நீடாமங்கலத்தில் தாசில்தார் தேவேந்திரன் தலைமையிலும், தேர்தல் துணை தாசில்தார் அறிவழகன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் நீடாமங்கலம் தாலுக்கா பகுதி வாக்காளர்களுக்கு கோலங்கள் மற்றும் கையெழுத்து இயக்கங்கள் மூலம் 100 சதம் வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். நீடாமங்கலம் பேரூராட்சி கீழத் தெருவுக்கு சென்று அங்கு தொழுகை முடித்து வந்த இஸ்லாமியர்களிடம் தாசில்தார் தேவேந்திரன், தேர்தல் துணை தாசில்தார் அறிவழகன், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி 100 சதவீதம் வாக்கை உறுதி செய்தனர். இஸ்லாமியர்கள் துண்டு பிரசுரங்களை ஆர்வத்துடன் பெற்று சென்றனர்.
The post நீடாமங்கலத்தில் 100 சதவீதம் வாக்களிக்க துண்டுபிரசுரம் விநியோகம் appeared first on Dinakaran.