- அரசினர் கல்லூரி
- பெரவூரணி கலனிவாசல் அரசு பள்ளி
- பேராவூரணி
- பெரவூரணி ஊராட்சி கல்லூரி
- களனிவாசல் பஞ்சாயத் யூனியன் நடுநிலைப்
- சேதுபவஸ்த்ரம் ஒன்றியம்
- பெரவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேசிய நலத்துறை திட்டம் அலகு -2
பேராவூரணி, ஏப்.2: பேராவூரணி அரசு கல்லூரி மாணவர்கள் சார்பில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் என்எஸ்எஸ் முகாம் நடைபெற்றது. பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு- 2, சார்பில், சிறப்பு முகாம் துவக்க விழா சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரசுக் கல்லூரி முதல்வர் திருமலைச்சாமி தலைமை வகித்தார். நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் பேராசிரியர் ராஜ்மோகன் வரவேற்றார். தமிழ்த் துறை தலைவர் ராணி முகாம் நோக்கம் குறித்து பேசினார். கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். முகாம் ஏப்.6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முகாமில் பேராசிரியர்கள் நித்தியசேகர், வினோத்குமார், சதீஷ்குமார் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவி அபிநயா நன்றி கூறினார்.
The post பேராவூரணி கழனிவாசல் அரசு பள்ளியில் அரசு கல்லூரி மாணவர்கள் என்எஸ்எஸ் திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.