×

கொள்ளிடம் அருகே புத்தூரில் பாசன வடிகால் வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகள்

கொள்ளிடம், ஏப். 2: கொள்ளிடம் அருகே புத்தூரில் நெடுஞ்சாலை சாலை மற்றும் பாசன வடிகால் வாய்க்காலில் அளவுக்கு அதிகமாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் சாலையோரம் உள்ள பாசன மற்றும் வடிகால் வாய்க்காலில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தினம் தோறும் கொட்டப்பட்டு வருகிறது. சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் அப்படியே சாலையை ஒட்டி உள்ள பாசனம் மற்றும் வடிகால் வாய்க்காலில் சேர்த்து கொட்டப்படுவதால் வாய்க்கால் குப்பைகளால் அடைக்கப்பட்டு வருகிறது.

இதில் மக்கும் குப்பைகளும் மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களும் பாலித்தீன் பைகளும் உடைந்த பிளாஸ்டிக் பொருட்களும் இறந்த விலங்கினங்களும் சேர்த்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் வாய்க்கால் மற்றும் சாலையோரம் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் செல்பவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாய்க்காலில் தண்ணீர் வரும்போது அதனை கால்நடைகள் குடிப்பதால் கால்நடைகள் நோயினால் பாதிக்கக் கூடிய நிலை இருந்து வருகிறது. எனவே சாலை ஓரம் மற்றும் பாசன வாய்க்காலில் குப்பை கொட்டுவதை உடனே நிறுத்த வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாகவும் அப்பகுதி கிராம மக்கள் சார்பில் புத்தூர் பாசனதாரர் சங்கத் தலைவர் ரகு தெரிவித்தார்

The post கொள்ளிடம் அருகே புத்தூரில் பாசன வடிகால் வாய்க்காலில் கொட்டப்படும் குப்பைகள் appeared first on Dinakaran.

Tags : Puttur ,Kollidam ,Kollidham ,Kollidam, Mayiladuthurai District ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு விற்பனை அங்காடி விற்பனையாளர் சஸ்பெண்ட்..!!