×

புன்னம்பசுபதிபாளையம் அருகே ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

க.பரமத்தி,ஏப்.2: புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராய பெருமாள் கோயிலில் மூலம் நட்சத்திரத்தையொட்டி நடந்த அபிஷேக விழாவில் சுற்றுப்பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். க.பரமத்தி ஒன்றியம் புன்னம் ஊராட்சியில் குட்டக்கடையில் இருந்து புன்னம் செல்லும் தார்சாலையில் அனுமந்தராய பெருமாள் (ஆஞ்சநேயர்) கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வாரத்தில் சனிக்கிழமை தோறும் பூஜையும் சிறப்பு நாட்களில் பல்வேறு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. மேலும் முக்கிய நாட்களான அமாவாசை, பவுர்ணமி, மூலம் நட்சத்திரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் வணங்கி வருகின்றனர். இக்கோயிலில் நேற்று மூலம் நட்சத்திரத்தையொட்டி பால், பன்னீர், இளநீர், பழச்சாறு, திருமஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அனுமந்தராயசாமிக்கு, வெண்ணை சாத்து, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு அனுமந்தராயசாமி (ஆஞ்சநேயர்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம், வெற்றிலை, துளசி, ஆகியன வழங்கப்பட்டது.

The post புன்னம்பசுபதிபாளையம் அருகே ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Anjaneyar Temple ,Punnambasupathipalayam ,K. Paramathi ,Anumantharaya Perumal Temple ,Punnampasupathipalayam ,Anumantharaya Perumal ,Anjaneyar ,Kuttakadi ,Punnam ,K. Paramadhi Union Punnam Panchayat ,Punnambasupathipaliyam ,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே ஆரோக்கிய ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்